இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு கார்கே "அட்வைஸ்"
இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு கார்கே "அட்வைஸ்"
ADDED : ஜன 04, 2024 04:53 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்தால் மட்டுமே மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும் என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்கே பேசியதாவது: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்ய, அடுத்த 3 மாதத்தை தலைவர்கள் கட்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும். முக்கியத்துவம் அல்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பதுடன், உட்கட்சி பிரச்னைகளை மீடியாக்களிடம் பேசாதீர்கள். இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தால் தான் தேர்தலுக்கு பிறகு புதிய அரசை அமைக்க முடியும்.
தேசிய ஜனநாயக கூட்டணி பெயரளவில் உள்ளன. ஆனால், ‛ இண்டியா' கூட்டணியானது, அடிமட்ட அளவில் தொண்டர்களுடன் தொடர்பில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் தோல்வியை மறைக்க காங்கிரஸ் கட்சியானது, உணர்ச்சிகரமான பிரச்னைகளை தூண்டி வருகிறது. வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் நிலைமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ராகுலின் பாத யாத்திரை எடுத்துக்காட்டும். இவ்வாறு கார்கே பேசினார்.