ADDED : பிப் 06, 2024 02:54 PM

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் 400 தொகுதியிலும் நாங்கள் தான் என பிரதமர் மோடி பேசியதற்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.
பார்லிமென்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசுகையில், லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ.,வுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும் எனக் கூறியிருந்தார்.
மக்கள் முடிவெடுப்பார்கள்
இது குறித்து காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால் பேசியதாவது: இப்போது தேர்தல் தேவையில்லை. ஏற்கனவே 400 இடங்களை அவர் பெற்றுள்ளார். தேர்தல் நடத்தினால் என்ன பயன்?. ஜனநாயக நாட்டில் மக்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். இந்த சர்வாதிகார அரசாங்கத்தை மாற்றவும் அகற்றவும் நாட்டு மக்கள் முடிவெடுப்பார்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மந்திர விளக்கு
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியதாவது: அவரிடம் மந்திர விளக்கு உள்ளது. அதனால் அவர் சொல்வது உண்மையாகிவிடும் என நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

