ADDED : ஏப் 08, 2024 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமர் மோடி, நேற்று(ஏப்ரல் 7) ஒரே நாளில், பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில், பிரசாரம் மேற்கொண்டார்.
லோக்சபா தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 3 மாநிலங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
பீகார் மாநிலம் நவ்டாவில், தேர்தல் பிரசாரம் செய்த அவர், பின்னர், ம.பி., மாநிலம் ஜபல்பூரில் 'ரோடு ஷோ'வில் பங்கேற்றார். பின்னர் மேற்கு வங்கம் பயணித்த அவர், ஜல்பைகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, ஓட்டு சேகரித்தார்.

