லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் ; தேர்தல் ஆணையம் ஆலோசனை
லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் ; தேர்தல் ஆணையம் ஆலோசனை
UPDATED : ஜன 11, 2024 10:56 PM
ADDED : ஜன 11, 2024 10:52 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.
பார்லிமென்ட் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்களின் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு உள்பட அனைத்து மாநில,மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் ஆணையர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்காக , வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்துவது, மாநிலங்களில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வறு விஷயங்கள் குறி்த்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி கடைசியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

