ஓட்டு வங்கியை கண்டு பயப்படும் ராகுல்: அமித்ஷா விளாசல்
ஓட்டு வங்கியை கண்டு பயப்படும் ராகுல்: அமித்ஷா விளாசல்
ADDED : மே 13, 2024 05:36 PM

மும்பை: 'காங்கிரஸ் ராகுல் தனது ஓட்டு வங்கியை இழக்க நேரிடும் என்ற பயத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு செல்லவில்லை' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: இந்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்ட உதவினார். கோயில் திறப்பு விழாவிற்கு ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ராகுல் தனது ஓட்டு வங்கியை இழக்க நேரிடும் என்ற பயத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வரவில்லை. பா.ஜ., வுக்கு அந்த பயம் எதுவும் இல்லை.
சனாதன தர்மம்
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை காங்கிரஸ் ரத்து செய்யவில்லை. காங்கிரஸ் சாவர்க்கரை அவமதித்தது. இதற்கு உத்தவ் தாக்கரே என்ன சொல்கிறார்?. இண்டியா கூட்டணியில் உள்ள முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி சனாதன தர்மத்தை அவமதித்துள்ளார். ராகுலால் நிலவுக்கு சந்திரயான் விண்கலம் கூட ஏவ முடியாது. அவரால் எப்படி பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க முடியும்?. நாட்டில் பயங்கரவாதத்தை அவர்களால் முடிவுக்கு கொண்டு வர முடியுமா?. இவ்வாறு அவர் பேசினார்.