ராகுலின் சொத்து மதிப்பு ரூ. 20 கோடி: வேட்பு மனுவில் தகவல்
ராகுலின் சொத்து மதிப்பு ரூ. 20 கோடி: வேட்பு மனுவில் தகவல்
UPDATED : ஏப் 04, 2024 10:43 AM
ADDED : ஏப் 04, 2024 10:04 AM

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி ராகுலிடம் ரூ.20 கோடியே 39 லட்சத்து 61 ஆயிரத்து 862 மதிப்பிலான சொத்து உள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள, 20 லோக்சபா தொகுதிகளுக்கு, வரும் 26ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், வரும் லோக்சபா தேர்தலிலும், இதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். ராகுல், நேற்று (ஏப்ரல் 03) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராகுல் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், '' தனது கையில் ரூ.55 ஆயிரம் ரொக்கம் பணம் உள்ளது. வங்கிகளில் ரூ. 26 லட்சத்து 25 ஆயிரத்து 157 சேமிப்பு உள்ளது. இது தவிர பங்கு சந்தையில் ரூ.4 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 519 உள்ளது. வைப்பு நிதியாக ரூ. 3 கோடியோ 81 லட்சத்து 33 ஆயிரத்து 572 உள்ளது.
தங்க பத்திரம் வழியாக ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 740 உள்ளது. சேமிப்புத் திட்டங்கள் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றில் ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 426 முதலீடு செய்துள்ளேன். ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 850 மதிப்பிலான நகைகள் இருக்கிறது.
மொத்தமாக ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்து உள்ளது. ரூ. 11.14 கோடி அசையா சொத்துகள் உள்ளது. மொத்தம் ரூ. 20 கோடியே 39 லட்சத்து 61 ஆயிரத்து 862 மதிப்பிலான சொத்து இருக்கிறது. சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

