UPDATED : ஜன 23, 2024 01:50 PM
ADDED : ஜன 23, 2024 01:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: 'வரும் லோக்சபா தேர்தலில் குஜராத்தில், மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும்' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.
குஜாரத்தில் பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைத்து, நட்டா பேசியதாவது: லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலை விட அதிக இடங்களில் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் நாங்கள் (பா.ஜ.,) வெற்றி பெற்றோம். அது மீண்டும் வரும் லோக்சபா தேர்தலில் நடக்கும். பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. உண்மையிலேயே இது அதிர்ஷ்டம். இவ்வாறு அவர் கூறினார்.

