ADDED : மே 13, 2024 06:06 PM

ராஞ்சி: இந்த முறை தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் தேர்தல் இருக்காது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளன. மக்கள் ஆபத்தில் உள்ளனர். மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்காது. பிரதமர் மோடி இந்த முறை வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் எந்தத் தேர்தலும் நடக்காது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தீர்கள்?.
தேர்தல் பத்திரங்கள்
ஏன் அதானியையும் அம்பானியையும் கைது செய்யவில்லை?. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பா.ஜ., தலைமையிலான அரசால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். இந்த முறை பா.ஜ., வெற்றி பெறாது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்தவர்கள் பெரும் பணக்காரர்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.