நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
l அயோத்தி ராமர் கோவில் திறப்பை ஒட்டி, கதக்கில் ஊர்வலம் செல்ல, ஸ்ரீராம சேனை அமைப்பினர், போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் அனுமதி மறுத்து கதக் எஸ்.பி., நேமகவுடா நேற்று உத்தரவிட்டார். ஆனாலும் ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்று, ஸ்ரீராம சேனை அமைப்பினர் கூறி உள்ளனர்.
l ஜப்பானில் வசிக்கும் கன்னடர்கள், ராமாயணா என்ற பெயரில் நேற்று கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் சிறுவர்கள் ராமர் போன்றும், சிறுமிகள் சீதா போன்றும் வேடமணிந்து நடனம் ஆடினர். இது அனைவரையும் கவர்ந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.