
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தற்போது இயந்திரத்தனமாக, தொழில்நுட்பத் தரவுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து நடக்கிறது. இதனால் நிறைய பிழைகள் ஏற்படுகின்றன. இது கடந்த காலத்திலும் நடந்துள்ளது. இந்த நடைமு றையில் பல குறைபாடுகள் உள்ளன. இவை, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைக்கிறது.
- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
எட்டி உதைப்பேன்!
மஹாராஷ்டிராவில் வசிக்கும் உத்தர பிரதேசம், பீஹாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஹிந்தி தங்கள் மொழி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த மொழி மீது எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால், ஹிந்தியை திணிக்க முயன்றால், அவர்களை விரட்டி அடித்து எட்டி உதைப்பேன்.
- ராஜ் தாக்கரே, தலைவர், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா
வீண்பழி கூடாது!
கேரளாவில், 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் பினராயி விஜயன், மாநில மக்களின் நலனுக்காக என்னென்ன செய்தார் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது வீண்பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும். தன் தவறை மறைக்க மத்திய பா.ஜ., அரசை அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
- ராஜிவ் சந்திரசேகர், கேரள பா.ஜ., தலைவர்

