லவ் ஜிஹாத்: ம.பி.,யில் மதம் மாற மறுத்த பெண் கழுத்தறுத்து கொலை
லவ் ஜிஹாத்: ம.பி.,யில் மதம் மாற மறுத்த பெண் கழுத்தறுத்து கொலை
ADDED : ஆக 05, 2025 01:31 AM

புர்ஹான்பூர்: மத்திய பிரதேசத்தில் திருமணத்திற்கும், மதம் மாறுவதற்கும் மறுப்பு தெரிவித்த பெண்ணை, வீடு புகுந்து கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த பெண்ணை கொலை செய்த முஸ்லிம் நபரை போலீசார் கைது செய்த நிலையில், அவரை துாக்கிலிடக் கோரி போராட்டம் வலுத்துள்ளது.
ஆத்திரம் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் நவாரா என்ற பகுதியில் வசித்து வந்தவர் பாக்யஸ்ரீ நாம்தேவ் தனுக், 35.
இவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் ரெயீஸ், 42, என்பவர் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
மேலும், முஸ்லிமாக மதம் மாறும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார். பாக்யஸ்ரீ இதற்கு ஒப்புக் கொள்ளாததால், அவர் மீது ரெயீஸ் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாக்யஸ்ரீ வீட்டிற்குள் நுழைந்த ரெயீஸ், அவரை சரமாரியாக தாக்கி, கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.
அப்போதும் ஆத்திரம் தீராமல் பாக்யஸ்ரீயின் உடலில் பலமுறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனால், அந்த வீடு முழுதும் ரத்தம் தெறித்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தப்பியோடிய ரெயீஸை அடுத்த சில மணி நேரங்களுக்குள் தேடிப் பிடித்து கைது செய்தனர்.
இரவு நேரத்தில் நடந்த இந்த படுகொலை சம்பவம், அக்கம் பக்கத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ் த்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம், அங்குள்ள ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படு கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டத்தை முன்னெடுத்த அமித் வருடே என்பவர், ''இது லவ் ஜிஹாத் போல தெரிகிறது.
''நான்கு நாட்களுக்கு முன்பாகவே ரெயீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீசாரிடம் பாக்யஸ்ரீ புகார் அளித்துள்ளார். ஆனால், சரியாக விசாரிக்காமல் அவரை விடுவித்துவிட்டனர். இதனால், பாக்யஸ்ரீயின் உயிர் பறிபோயிருக்கிறது.
நடவடிக்கை ''இதற்கு போலீசாரின் அலட்சியமே காரணம். படுபாதக செயலில் ஈடுபட்ட ரெயீஸை துாக்கில் போட வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கைதான ரெயீஸ் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்து உள்ளது.
இதையடுத்து, சட்டவிரோதமாக அவர் ஆக்கிரமித்து வைத்திருந்த சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.