வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது புயல் சின்னம்: வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது புயல் சின்னம்: வானிலை மையம் அறிவிப்பு
ADDED : அக் 24, 2025 09:23 PM

புதுடில்லி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் கூறியதாவது;தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று (அக்.24) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக்.25) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின்னர், அக்.26ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்.27ம் தேதி காலை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடையக்கூடும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முன்னதாக வடகிழக்கு பருவமழையின் முதல் புயலாக உருவாக இருக்கும் இந்த புயல் சின்னத்துக்கு மோந்தா (Montha) என பெயரிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

