sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லக்னோவில் டபுள்டக்கர் பஸ் விபத்தில் 4 பேர் பலி; டிரைவர் தூங்கியதால் விபரீதம்

/

லக்னோவில் டபுள்டக்கர் பஸ் விபத்தில் 4 பேர் பலி; டிரைவர் தூங்கியதால் விபரீதம்

லக்னோவில் டபுள்டக்கர் பஸ் விபத்தில் 4 பேர் பலி; டிரைவர் தூங்கியதால் விபரீதம்

லக்னோவில் டபுள்டக்கர் பஸ் விபத்தில் 4 பேர் பலி; டிரைவர் தூங்கியதால் விபரீதம்


ADDED : பிப் 23, 2026 07:33 PM

Google News

ADDED : பிப் 23, 2026 07:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டபுள் டக்கர் பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

லூதியானாவில் இருந்து தர்பங்காவுக்கு டபுள் டக்கர் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். லக்னோ மாவட்டம், கோசாய் கஞ்ச் என்ற இடத்தில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சானது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் இறங்கினர். விசாரணையில் பஸ் ஓட்டுநர் தூங்கி விட்டதால் விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. விபத்து காரணமாக, அப்பகுதியில் பலமணிநேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us