ADDED : மார் 30, 2024 11:28 PM

லக்னோ: பஞ்சாப் அணியை 21 ரன்னில் வீழ்த்தியது லக்னோ அணி.
இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. இன்று லக்னோவில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் லக்னோ அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு செய்தது.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 15 ரன்களுக்கும் குயின்டன் டிகாக் (54)அரைசதம் அடித்தார்.பூரன் 42 ரன்கள் சேர்த்தார்.குர்ணால் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது.
200 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், ஜானி பேர்ஸ்டோவ் 42 ரன்களும் ஷிகர் தவான் 70 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்து அவுட் ஆகினர். ஆனால் பின்னால் வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமால் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். லிவிங்ஸ்டோன் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் சஷாங்க் சிங் 9 ரன்களும் எடுத்திருந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. மேனக் யாதவ் 3 விக்கெட்டுகளையும் மோசின் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
