சாவர்க்கர் குறித்து விமர்சனம்: நேரில் ஆஜராக ராகுலுக்கு லக்னோ கோர்ட் சம்மன்
சாவர்க்கர் குறித்து விமர்சனம்: நேரில் ஆஜராக ராகுலுக்கு லக்னோ கோர்ட் சம்மன்
ADDED : டிச 13, 2024 08:22 PM

லக்னோ: வீர் சாவர்க்கர் குறித்து பேசியதாக தொடரப்பட்டஅவதூறு வழக்கில் காங்., எம்.பி.யும். லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுலுக்கு லக்னோ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது
2022ம் ஆண்டு நவ., மாதம் ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது, பிரிட்டிசாரிடம் ஒய்வூதியம் பெற்று பிழைப்பு நடத்தியவர் தான் வீர் சாவர்க்கர். அவர் ஆங்கிலேயரின் அடிமை என பேசினார்.
இது குறித்து வழக்கறிஞர் நிருபேந்திரா பாண்டே என்பவர் லக்னோ கோர்ட்டில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் ஹிந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சாவர்க்கரின் நற்பெயர் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் பேச்சு இருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக்கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுலுக்கு சம்மன் அனுப்பி' 2025 ஜனவரி 25-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.