18 மணி நேரம் போராட்டம் பலன் அளிக்கவில்லை; ம.பி.,யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி
18 மணி நேரம் போராட்டம் பலன் அளிக்கவில்லை; ம.பி.,யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி
UPDATED : டிச 29, 2024 01:13 PM
ADDED : டிச 29, 2024 07:26 AM

போபால்: ம.பி., மாநிலம் குணா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன், 18 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி உயிரிழந்தான்.
மத்தியப்பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு அருகே, நேற்று விளையாடிக் கொண்டிருந்த, சுமீத் மீனா என்ற 10 வயது சிறுவன் தவறி விழுந்தான். தகவல் அறிந்து பெற்றோர் பதறி போயி, மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. சம்பவ இடத்திற்கு, விரைந்த மீட்பு படையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
18 மணி நேரமாக, மீட்பு படையினர் போராடி, இன்று (டிச.,29) காலை 9.30 மணி அளவில் மீட்டனர். சிறுவனுக்கு ஆக்சிஜன் கொடுத்து, உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ஏற்கனவே, ராஜஸ்தான் மாநிலத்தில் 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் முயற்சி ஏழு நாளாக தொடர்ந்து நடக்கிறது. இந்த சூழலில், மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஒரு நிகழ்வு நடந்து, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.