‛பிசி'யான ரோட்டில் பெண் பலாத்காரம்: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கல்நெஞ்சக்காரர்கள்; ம.பி.,யில் அரங்கேறிய கொடூரம்
‛பிசி'யான ரோட்டில் பெண் பலாத்காரம்: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கல்நெஞ்சக்காரர்கள்; ம.பி.,யில் அரங்கேறிய கொடூரம்
ADDED : செப் 06, 2024 05:49 PM

போபால்: ம.பி.,யில் உஜ்ஜயினியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த சாலையில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். அங்கிருந்தவர்கள், அந்த பெண்ணை காப்பாற்றாமல், அதனை வீடியோவாக பதிவு செய்து ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.
உஜ்ஜயினி நகரில் கோய்லா பாதக் பகுதியில் பெண் ஒருவர் குப்பை பொறுக்கி கொண்டு இருந்தார். அந்த பகுதியில் இருந்த லோகேஷ் என்பவர், அந்த பெண்ணை அழைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அவருடன் அந்த பெண் சென்றார். சாலையிலேயே மயக்க மருந்து கலந்த மதுபானத்தை லோகேஷ் கலந்து கொடுத்துள்ளார். இதனையறியாமல் குடித்து அங்கேயே மயக்கமடைந்த அந்த பெண்ணை, அவர் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச்சென்றார்.
இதனை பார்த்த அங்கிருந்த சிலர், அந்த பெண்ணுக்கு உதவாமல் மொபைல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது போலீசாரின் கவனத்திற்கு செல்லவே, லோகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.