தண்டவாளத்தில் ஒரு டிராக்டர்! வெலவெலத்து போன டிரைவர்! அப்புறம் நடந்த 'மேஜிக்'
தண்டவாளத்தில் ஒரு டிராக்டர்! வெலவெலத்து போன டிரைவர்! அப்புறம் நடந்த 'மேஜிக்'
ADDED : செப் 10, 2024 10:17 AM

போபால்; மத்தியபிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் டிராக்டர் நிறுத்தப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிவேக ரயில்
இந்த சம்பவம் ஜபல்பூர்-இட்டார்சி ரயில் வழித்தடத்தில் குராம்கேடி என்ற பகுதியில் நடைபெற்றது. தண்டவாளத்தில் சோம்நாத் ரயில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் குறுக்கே டிராக்டர் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதை ரயில் டிரைவர் கண்டார்.
டிராக்டர்
கண நேரத்தில் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக சுதாரித்து பிரேக்கை இயக்கினார். இதன் காரணமாக டிராக்டர் மீது மோதாமல் ரயில் அங்கேயே நின்றது. டிரைவரின் துடிப்பான சமயோசிதம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பாதுகாப்பு படை
இந்த சம்பவம் குறித்து ரயில் டிரைவர் உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினார். இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக டிராக்டரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
பழுது
பின்னர் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு உரிமையாளரை கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போது டிராக்டர் தண்டவாளத்தை கடக்கும் போது பழுதடைந்துவிட்டதாகவும், அதை சரி செய்ய முடியாமல் அங்கேயே நிறுத்திவிட்டு அதன் உரிமையாளர் சென்றதையும் கண்டுபிடித்தனர்.