மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு; தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு; தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : செப் 09, 2025 06:43 AM

-டில்லி சிறப்பு நிருபர்-
மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், 'மதுரை மாநகராட்சியின் சொத்து வரியில்,3,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. ஆனால் வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே ஊழல் நடந்திருப்பதாக கூறி அதை மட்டும் விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் வரிவான விசாரணை தேவை. எனவே வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, கோரிக்கை வைத்திருந்தார்.
மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், 'சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே இது தொடர்பான வழக்கை விசாரித்து வருவதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.