sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

  குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மஹா., அரசு பலே திட்டம் ! : அரசு ஆபீஸ்கள், வங்கிகளில் சாட்சியம் பெற ஏற்பாடு

/

  குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மஹா., அரசு பலே திட்டம் ! : அரசு ஆபீஸ்கள், வங்கிகளில் சாட்சியம் பெற ஏற்பாடு

  குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மஹா., அரசு பலே திட்டம் ! : அரசு ஆபீஸ்கள், வங்கிகளில் சாட்சியம் பெற ஏற்பாடு

  குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மஹா., அரசு பலே திட்டம் ! : அரசு ஆபீஸ்கள், வங்கிகளில் சாட்சியம் பெற ஏற்பாடு

1


ADDED : செப் 25, 2025 01:47 AM

Google News

1

ADDED : செப் 25, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவில் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய வங்கி கிளைகளில் சாட்சியம் பெறுவதற்கான பிரத்யேக இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

ஐ.பி.சி., எனப்படும் இந்திய குற்றவியல் சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பெயர்கள் மாற்றப்பட்டன.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் மஹாராஷ்டிரா அரசு தீவிரமாக இறங்கியது.

வழக்கு விசாரணை இதற்காக கிரிமினல் நீதி பரிபாலன முறையில் நவீன தொழில்நுட்பத்தை தத்தெடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மஹாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு வரும்போதெல்லாம், பல தடவை, சாட்சியங்கள் கிராமத்தில் இருக்க நேரிடுகிறது அல்லது நீதிமன்றத்திற்கு குறித்த நேரத்தில் வரமுடியாமல் போகிறது.

சாட்சியங்கள் வராத காரணத்தினால், அந்த வழக்கு விசாரணை அடுத்த தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இதனால், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை கருத்தில் வைத்து, வருங்காலத்தில் இத்தகைய தாமதங்கள் ஏற்படுவதை தவிர்க்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்படுவது தவிர்க்கப்படும். இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த நேரத்தில் நீதி கிடைக்கும்.

இத்தகைய நிலைமைகளை கருத்தில் வைத்து, நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க ஒருவரால் வர முடியாத சமயத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், சாட்சியம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காகவே, அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், தேசிய வங்கி கிளைகள் 'வீடியோ கான்பரன்ஸ்' வசதியுடன் சாட்சியம் பெறும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிப்பு இந்த புதிய முறையால், சாட்சியம் அளிப்பவர் மட்டுமின்றி, ஜாமின் கோரும் குற்றவாளிகளாலும், வாக்குமூலம் அளிக்க முடியும்.

பி.என்.எஸ்.எஸ்., சட்டப்பிரிவு 265 (3), 266 (2) மற்றும் 308 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆடியோ, வீடியோ வசதியுடன் கூடிய தொழில்நுட்பம் மூலம் பிரத்யேக இடத்தில் இருந்து சாட்சியம் பெற முடியும்.

அனைத்து அரசு துறை அலுவலகங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், ஆணையங்கள், தீர்ப்பாயங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லுாரிகள், பொது சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள், சாட்சியம் பெறும் பிரத்யேக இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில், டி.ஜி.பி., அலுவலகத்தின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்கள், போலீஸ் பயிற்சி நிலையங்கள், போலீஸ் அகாடமி, தடயவியல் அறிவியல் பரிசோதனை கூடம், மாநில கலால் ஆணையரகம், சட்ட சேவைகள் ஆணையம், நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும்.

தேசிய வங்கிகளின் அனைத்து கிளைகள், மாநிலத்தில் உள்ள அனைத்து ஜில்லா பரிஷத் அலுவலகங்கள், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி அலுவலங்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகங்களும் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றங்களிலும் இந்த முறை பின்பற்றப்படும். இதனால், வழக்குகள் ஒத்திவைக்கப்படும் பேச்சுக்கே இடம் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us