மகா., சட்டசபை தேர்தல்: மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும்: பவார்
மகா., சட்டசபை தேர்தல்: மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும்: பவார்
UPDATED : ஜூன் 30, 2024 10:34 PM
ADDED : ஜூன் 30, 2024 08:50 PM

மும்பை: வரவிருக்கும்சட்டசபை தேர்தலிலும் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொடரும் என தேசிய வாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) தலைவர் சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: மாநிலத்தில் மாற்றம் தேவைப்படுகிறது.அதனை நிறைவேற்றுவது எதிர்கட்சி கூட்டணிகளின் தார்மீக பொறுப்பு விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் என்சிபி (எஸ்.பி) , காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் பிரிவு) இணைந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும்.
மகாபாரதத்தில் அர்ஜூனின் இலக்கு மீன் கண் மீது இருந்தது போன்று நம் நோக்கம் முழுவதும் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எங்களின் கூட்டணிக்கு மக்கள் நல்ல பதிலை தந்துள்ளனர். அந்த தேர்தலில் சிறு கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க இயலாமல் போனது.
ஆனால் சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி (பி.டபிள்யூ.பி) உள்ளிட்ட சிறு,சிறு கட்சிகளின் நலன்களை பாதுகாப்பது எங்களது தார்மீக பொறுப்பு அவர்களும் முன்னேற முயற்சிகள்இருக்கும்.
தற்போது வரையில் கூட்டணி தொடரும் என்ற போதிலும் எந்தந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்த பேச்சுவார்த்தை இது வரையில் துவங்கவில்லை. விரைவில் பேச்சுவார்த்தை துவங்கும் என பவார் கூறினார்.
இந்தாண்டு இறுதிக்குள்ளாக மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது நடைபெற்ற மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 21 -60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை, வீடுகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் காஸ், இளைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவிதொகை வழங்கப்படும் என சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.