கின்னஸ் புத்தகத்தில் மஹா கும்பமேளா.. புதிய சாதனைகள்!
கின்னஸ் புத்தகத்தில் மஹா கும்பமேளா.. புதிய சாதனைகள்!
ADDED : பிப் 28, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹா கும்பமேளாவில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன.
ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 80 அடி நீளம், 5 அடி அகல துணியில் 10,000 பேர் பங்கேற்று கையால் வரைந்த ஓவியம்; 15,000 துாய்மை பணியாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் விழா நடந்த இடத்தில் துாய்மை பணி மேற்கொண்டது உள்ளிட்ட புதிய சாதனைகள் கின்னஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டன. இதற்கான சான்றிதழை முதல்வரிடம் கின்னஸ் அமைப்பினர் வழங்கினர். இதற்கு முன் 10,000 பேர் ஒரே நேரத்தில் துாய்மை பணி மேற்கொண்டதே சாதனையாக இருந்தது.