அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்: புனேவில் கர்ப்பிணிகள் 26 பேர் பாதிப்பு
அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்: புனேவில் கர்ப்பிணிகள் 26 பேர் பாதிப்பு
UPDATED : ஆக 07, 2024 11:27 AM
ADDED : ஆக 07, 2024 11:14 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் கர்ப்பிணிகள் 26 பேர் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 முதல் 78 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே, ஜிகா வைரஸ் பரவுகிறது. கர்ப்பிணி ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டால், அவரது கருவில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற மாநிலங்களை காட்டிலும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இந்த பாதிப்பு அதிகம் தென்படுகிறது. புனேவில், 26 கர்ப்பிணிகள் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர்.
அறிவுறுத்தல்
குறிப்பாக, ஜிகா வைரஸ் தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ''பாதிக்கப்பட்ட 26 கர்ப்பிணிப் பெண்களின் நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலோர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்'' என டாக்டர்கள் தெரிவித்தனர்.