மஹாராஷ்டிரா தேர்தல் : தீபாவளிக்கு பின் மோடியின் பிரசாரம் துவக்கம்
மஹாராஷ்டிரா தேர்தல் : தீபாவளிக்கு பின் மோடியின் பிரசாரம் துவக்கம்
ADDED : அக் 24, 2024 10:45 PM

புதுடில்லி: தீபாவளி பண்டிகை முடிந்த பின் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
288 தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் நவ. 20-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் தேசியவாத காங்., காங்கிரஸ், உத்தவ் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ‛மஹா விகாஸ் அகாடி' என்ற கூட்டணியாகவும், பா.ஜ., ஏக்நாத்ஷிண்டே சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ‛மஹாயூதி' என்ற கூட்டணியும் அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
இந்நிலையில் மோடியின் பிரசார பொதுக்கூட்டம் அவரது உரை தான் பா.ஜ., கூட்டணிக்கு வலு சேர்க்கும் என்பதால் மஹாராஷ்டிரா தேர்தலில் அவரது பிரசாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இதையடுத்து பா.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசார திட்டம் குறித்த தகவல் இன்று வெளியாகியுள்ளது.
அதில் தீபாவளி பண்டிகை முடிந்த பின் மோடியின் தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், மாநிலம் முழுதும் வாகன பேரணி நடத்திட திட்டமிட்டுள்ளதாக பா.ஜ., டில்லி தலைமை அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன/