விரைவில் மகாராஷ்டிரா தேர்தல்; தயாராகுது தேர்தல் கமிஷன்!
விரைவில் மகாராஷ்டிரா தேர்தல்; தயாராகுது தேர்தல் கமிஷன்!
ADDED : செப் 28, 2024 06:14 PM

மும்பை: தீபாவளி, சாத் பூஜை ஆகிய திருவிழாக்களை மனதில் வைத்து, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்யுமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை அளித்துள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், இரண்டு நாட்களாக மும்பையில், அரசியல்கள் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நாங்கள், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் அணி) ஆம் ஆத்மி உள்ளிட்ட 11 அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். அதன் அடிப்படையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.
தீபாவளி, சாத் பூஜா ஆகிய திருவிழாவிற்கு முன்னரே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட கோரிக்கை விடுத்தனர்.
மொத்த வாக்காளர்கள் 9.59 கோடி பேர், இதில் 4.59 கோடி ஆண்களும், 4.64 கோடி பெண்களும் ஓட்டுப்போட தகுதியானவர்கள். 18 வயது பூர்த்தியான, முதன் முதல் வாக்காளர்களாக 19.48 லட்சம் பேர்கள் உள்ளனர்.
மொத்தம் உள்ள சட்டமன்ற தொகுதிகள் 288, எஸ்.சி. 29 தொகுதிகள், எஸ்.டி. 25 தொகுதிகள் அடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில், மஹா விகாஷ் அகாடி கூட்டணிக்கும், மஹா யுதி கூட்டணிக்கும் முக்கிய போட்டி நடைபெற உள்ளது.