மஹா., முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தார்
மஹா., முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தார்
UPDATED : பிப் 13, 2024 03:34 PM
ADDED : பிப் 13, 2024 01:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: காங்கிரசில் இருந்து விலகிய மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தார்.
மஹாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். அம்மாநில முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்து உள்ளார். தற்போது எம்.எல்.ஏ., ஆக உள்ள அசோக் சவான் காங்கிரசில் இருந்து நேற்று விலகினார்.
இன்று அவர், அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன் காங்கிரஸ் முன்னாள் எம்எல்சி அமர் ராஜூர்கரும் பா.ஜ.,வில் இணைந்தார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அசோக் சவான் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்துள்ளது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.