ADDED : மார் 11, 2025 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மஹாராஷ்டிராவின் சதாரா தொகுதி பா.ஜ., - எம்.பி.,யும், சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலுமான உதயன்ராஜே போஸ்லே, மஹாராஷ்டிராவில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என மாநில அரசும் கருதுகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், காங்., அரசு, அந்த இடத்தை தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் வைத்து விட்டது. எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

