சபரி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி அருங்காட்சியகம் இன்று திறப்பு
சபரி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி அருங்காட்சியகம் இன்று திறப்பு
ADDED : ஜன 29, 2025 10:37 PM

பாலக்காடு; பாலக்காடு, அகத்தேத்தறை சபரி ஆசிரமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மகாத்மா காந்தி அருங்காட்சியகம் இன்று திறக்கப்படுகிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அகத்தேத்தறை நடக்காவு மேம்பாலம் அருகே சபரி ஆசிரமம் உள்ளது. காந்தியும் கிருஷ்ணசாமி ஐயரும், சக ஊழியர்களும் சேர்ந்து 1923ல் துவங்கிய இந்த ஆசிரமம், நாட்டின் முதல் பொதுப்பள்ளிக்கூடமாக செயல்பட துவங்கியது.
இங்கு, மகாத்மா காந்தி மூன்று முறையும், அவரது மனைவி கஸ்தூர்பாவும் இங்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், ஆசிரமத்தில் பாலக்காடு தொகுதி எம்.பி.,யின் வளர்ச்சி நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, சபரி ஆசிரமத்தின் தோற்றம் மற்றும் வரலாறு ஆகியவற்றை உள்ளடங்கிய, 2500 சதுரஅடியில் உள்ள அருங்காட்சியத்தை, காலை 11:00 மணிக்கு எம்.பி., ஸ்ரீகண்டன் திறந்து வைக்கிறார். மலம்புழா எம்.எல்.ஏ., பிரபாகரன் தலைமை வகிக்கிறார்.
விழா ஏற்பாடுகளை, சபரி ஆசிரம நிர்வாக குழுவினர்களான ராஜு, ஜேக்கப் ஆகியோர் செய்து வருகின்றனர்.