ADDED : பிப் 29, 2024 11:14 PM

மைசூரு: ''லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ஆசை இல்லை. அரசியலில் எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது'' என, ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.
மைசூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் போட்டியிடும், ஆசை எனக்கு இல்லை. பொருளாதாரம், உடல், மனரீதியாக நான் சரியாக இல்லை. அரசியலில் எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தோற்றதால், மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.
மைசூரு எம்.பி., பிரதாப் சிம்ஹா, கடந்த 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.
மைசூரில் போட்டியிடும்படி, பா.ஜ., தலைவர்கள் என்னை கேட்டுக் கொண்டனர். வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஆனால் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன்.
கட்சி கூறும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, தயாராக இருக்கிறேன். மாநிலத்தில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

