sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹரியானா சட்டசபை தேர்தல்: வெற்றி பெற்ற வி.ஐ.பி.,க்கள்

/

ஹரியானா சட்டசபை தேர்தல்: வெற்றி பெற்ற வி.ஐ.பி.,க்கள்

ஹரியானா சட்டசபை தேர்தல்: வெற்றி பெற்ற வி.ஐ.பி.,க்கள்

ஹரியானா சட்டசபை தேர்தல்: வெற்றி பெற்ற வி.ஐ.பி.,க்கள்

2


UPDATED : அக் 08, 2024 07:40 PM

ADDED : அக் 08, 2024 11:54 AM

Google News

UPDATED : அக் 08, 2024 07:40 PM ADDED : அக் 08, 2024 11:54 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் சைனி, காங்கிரசின் பூபிந்தர் சிங் ஹூடா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில், கடந்த அக்., 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. தேர்தல் களத்தில் இறங்கிய முக்கிய வேட்பாளர்களில் வெற்றி பெற்றது யார்? என்பது குறித்து பார்க்கலாம்.

முதல்வர் நயாப் சிங்

Image 1330356ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, பா.ஜ., சார்பில் லத்வா தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு வயது 54. இவர் மீது எந்த ஊழல் வழக்குகளும் இல்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். இவர், காங்கிரஸ் வேட்பாளரை 16,054 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்தினார்.

பூபிந்தர் சிங் ஹூடா

Image 1330357ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா. இவருக்கு வயது 77. இவர் கர்ஹி சாம்ப்லா- கிலோய் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவர் 71,465 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அனில் விஜ்

Image 1330358அம்பாலா கன்ட் தொகுதியில் பா.ஜ., சார்பில் அனில் விஜ் போட்டியிட்டார். இவர் நான் கட்சியில் சீனியர் என்றும், நான் வெற்றி பெறுவேன் என்றும் அடிக்கடி கூறி வந்தார். முதலில் இவர் பின் தங்கினாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னேறி 7,277 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வினேஷ் போகத் வெற்றி

Image 1330359ஜுலானா தொகுதியில் காங்., கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார்.இவர், ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். இவர் மொத்தம் 65,080 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6,015 ஓட்டுக்கள் அதிகம் பெற்றார்.

ஸ்ருதி சவுத்ரி

Image 1330360சட்டசபை தேர்தலில் தோஷம் தொகுதியில் பா.ஜ., சார்பில் ஸ்ருதி சவுத்ரி போட்டியிட்டார். 48 வயதான இவர் மீதும் எந்த வழக்குகளும் இல்லை. இவர், 14,257 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

சாவித்ரி ஜிண்டால்

Image 1330361ஹிசார் தொகுதியில், நாட்டின் பணக்காரப் பெண்மணி சாவித்ரி ஜிண்டால் சுயேச்சையாக போட்டியிட்டு 18,941 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.






      Dinamalar
      Follow us