தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சபரிமலையில் மூன்று முறை காட்சியளித்த மகரஜோதி :சாமியே சரணம் ஐயப்பா; பக்தர்கள் பரவசம்

சபரிமலையில் மூன்று முறை காட்சியளித்த மகரஜோதி :சாமியே சரணம் ஐயப்பா; பக்தர்கள் பரவசம்

சபரிமலையில் மூன்று முறை காட்சியளித்த மகரஜோதி :சாமியே சரணம் ஐயப்பா; பக்தர்கள் பரவசம்


ADDED : ஜன 15, 2024 06:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 06:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சபரிமலை: சபரிமலையில் இன்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு தொடர்ந்து மூன்று முறை காட்சியளித்தது மகரஜோதி. தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30க்கு சரங்குத்தி வந்தடைந்தது. இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. மாலை 6:20 மணிக்கு 18ம் படி வழியாக ஸ்ரீ கோயில் முன்புறம் வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவித்தனர்.

தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் சன்னிதானத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரமும், தொடர்ந்து மகரஜோதி மூன்று முறையும் காட்சி தந்தது. இதனை பார்த்த ஐயப்ப பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். அப்போது சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us