பற்றி எரியும் பாலியல் புகார்! அப்பாடா... பிறந்த நாளில் வாயை திறந்த நடிகர் ஜெயசூர்யா!
பற்றி எரியும் பாலியல் புகார்! அப்பாடா... பிறந்த நாளில் வாயை திறந்த நடிகர் ஜெயசூர்யா!
ADDED : செப் 01, 2024 09:39 AM

திருவனந்தபுரம்: தம்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பொய், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
சினிமா உலகம்
கேரள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்கள் அதில் கூறப்பட்டு உள்ளன. தெளிவற்ற நிலை
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றிய விவாதங்கள் முற்று பெறாமல் இருக்கின்றன. குற்றச்சாட்டில் சிக்கிய நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் எந்த அளவுக்கு நடவடிக்கை இருக்கும் என்பது பற்றிய தெளிவு இல்லாத நிலையே காணப்படுகிறது.மறுப்பு
இப்படிப்பட்ட தருணத்தில், தம் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்முறையாக மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயசூர்யா. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது நிலையையும், அடுத்த எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.சட்டப்போராட்டம்
நடிகர் ஜெயசூர்யாவின் அறிக்கை விவரம்; எம் மீது கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை எனது வழக்கறிஞர்கள் குழு கையாளும்.வலி தரும் விஷயம்
மனசாட்சியற்ற எவருக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவது என்பது மிக எளிது. தவறான குற்றச்சாட்டை முன் வைப்பது மிக வலியை தரக்கூடிய விஷயம். பொய் என்பது உண்மையை விட வேகமாக பயணிக்கும். ஆனால் உண்மை தான் என்றுமே ஜெயிக்கும். வேதனையான பிறந்த நாள்
நான் குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் நிச்சயம் தொடரும். நமது நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பிறந்த நாளை வேதனையான பிறந்த நாளாக மாற்றிய, பங்காற்றியவர்களுக்கு மிக்க நன்றி என்று அவர் கூறி உள்ளார்.மவுனம் பேசியது
கனத்த மவுனத்தை கலைத்து முதல்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ள நடிகர் ஜெயசூர்யாவுக்கு இன்று பிறந்த நாள். தமது பிறந்த நாளில் அறிக்கை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை அவர் வெளியிட்டு இருக்கிறார்.