உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 17, 2024 12:55 AM

அ நிறம் | அளவு
கொச்சி, பிரபல மலையாள எழுத்தாளரான கே.பி.ஸ்ரீதேவி, 84, கேரளாவின் கொச்சி திருப்புனித்துராவில் உள்ள வீட்டில் நேற்று காலமானார். வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த இவர், 'யக்ஞம், பறைபெட்ட பந்திருகுளம், அக்னிஹோத்திரம்' போன்ற பிரபல படைப்புகளை எழுதியுள்ளார்.
இளம் வயதிலேயே எழுத துவங்கிய இவர், நாவல், சிறுகதைகள், சிறுவர் இலக்கியங்கள் போன்றவற்றில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்.
குறிப்பாக நம்பூதிரி பிராமண சமூக பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படைப்புகளை எழுதி பிரபலமானார். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
