அதெல்லாம் சூப்பர் காமெடி; பா.ஜ., பற்றி காங்கிரஸ் விமர்சனம்
அதெல்லாம் சூப்பர் காமெடி; பா.ஜ., பற்றி காங்கிரஸ் விமர்சனம்
ADDED : நவ 02, 2024 09:50 AM

புதுடில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 100 நாள் திட்டம் என்பது மலிவான விளம்பரம் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல் என்று பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்ததற்கு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பொய், வஞ்சகம், போலித்தனம், கொள்ளை மற்றும் விளம்பரம் உள்ளிட்டவையை தான் உங்கள் அரசு பிரதிபலிக்கிறது. உங்களின் 100 நாள் திட்டம் ஒரு மலிவான விளம்பரம் தான். 2047 ரோட் மேப்பிற்காக 20 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இருந்து உள்ளீடு பெற்றதாக, கடந்த மே 16ம் தேதி நீங்கள் சொன்னீர்கள். இதுபற்றி ஆர்.டி.ஐ., மூலம் தகவல் கேட்டால், உங்களின் பொய்களை மறைப்பதற்காக, அந்த விபரங்களை பிரதமர் அலுவலகம் தர மறுத்துள்ளது. பா.ஜ., என்றாலே துரோகமும், நாடகமும் தான், எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி., வரி, வளர்ந்த இந்தியா, தேர்தல் பத்திரம், வறுமை, தலீத்துகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்டவை பற்றி குறிப்பிட்டு, பிரதமர் மோடிக்கு கார்கே கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியின் கியாரண்டி, 140 கோடி மக்களுக்கு சூப்பர் காமெடி என்றும் கிண்டலடித்திருந்தார்.

