தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மாலுார் வனத்தில் தீ: 150 ஏக்கர் நாசம்

மாலுார் வனத்தில் தீ: 150 ஏக்கர் நாசம்

மாலுார் வனத்தில் தீ: 150 ஏக்கர் நாசம்


ADDED : மார் 08, 2024 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாலுார்: மாலுாரின் சிக்கதிருப்பதி அருகே, லக்கூர் கிராமத்தை ஒட்டியுள்ள காடுமுத்சந்திரா என்ற வனப்பகுதியில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

சிக்கதிருப்பதி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது லக்கூர். இங்கு, 300 ஏக்கர் வனப் பகுதி உள்ளது. இங்கு மயில்கள், மான்கள் உட்பட பல வகையான பறவைகளும் உள்ளன.

இங்கு நேற்று, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், 150 ஏக்கர் வனப் பகுதியில் உள்ள காய்ந்த இலைகள், புதர், மரங்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு படையினரும், வன ஊழியர்களும் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us