வெள்ளப்பெருக்கு கையாள தெரியாத மம்தா அரசு: அசாம் முதல்வர் விமர்சனம்
வெள்ளப்பெருக்கு கையாள தெரியாத மம்தா அரசு: அசாம் முதல்வர் விமர்சனம்
ADDED : செப் 20, 2024 05:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திஸ்பூர்: சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை கையாண்டது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தாவை , அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மேற்கு வங்க மக்கள், தங்கள் அரசின் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் மம்தா பானர்ஜி, வெள்ளப்பெருக்கை கையாள தெரியாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜார்கண்ட் மாநில எல்லையைத் தடுத்து, அம்மாநில மக்களை குறைகூறுகிறார்.இந்த விவகாரத்தில், ஜார்கண்ட் முதல்வர் மவுனம் காத்து வருகிறார்.
மேற்கு வங்க வெள்ளத்திற்கு, ஜார்கண்ட் பொறுப்பேற்காது, என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு, தெளிவு படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டது; ஜார்கண்ட் மக்களின் கவுரவப் பிரச்சினை.இவ்வாறு சர்மா கூறியுள்ளார்.