மம்தாவின் வற்புறுத்தலால் மாற்றம்; வேட்பு மனு வாபஸ் முடிவில் வேட்பாளர் ஜகா!
மம்தாவின் வற்புறுத்தலால் மாற்றம்; வேட்பு மனு வாபஸ் முடிவில் வேட்பாளர் ஜகா!
UPDATED : செப் 19, 2026 02:32 PM
ADDED : செப் 19, 2026 12:27 PM

கோல்கட்டா: ரெஜிநகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ரபியுல் ஆலம் சவுத்ரி, தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பிறகு மம்தாவின் வற்புறுத்தலால் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி , சட்டசபை தேர்தலில் நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கும், ரெஜிநகர் தொகுதிக்கும் அக்.,6 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பாஜ, காங்கிரஸ், மம்தா ஆகியோர் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தனர்.
மம்தா தரப்பில் சஞ்சிதா தேவ் பிரதான் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசிய பிறகு தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். தற்போது ரெஜிநகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரபியுல் ஆலம் சவுத்ரியும் வேட்புமனுவை திரும்ப பெற்று தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கி உள்ளார்.
மம்தாவுடன் கலந்தாலோசித்த பின்னரே தனது வேட்புமனுவைத் திரும்பப் பெறும் முடிவை எடுத்தேன் என சவுத்ரி தெரிவித்தார். சில மணி நேரத்தில் மம்தா பானர்ஜியின் வற்புறுத்தலின் பேரில் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக ரபியுல் ஆலம் சவுத்ரி தெரிவித்தார். அவர், ''நான் தேர்தலில் போட்டியிடுவேன். மம்தா பானர்ஜி என்னிடம் பேசிய பிறகு எனது முடிவை மறுபரிசீலனை செய்தேன்,' என்று கூறினார்.
