மம்தாவுக்கு அடுத்த சிக்கல்: அதிருப்தி எம்எல்ஏக்களுடன் 23 எம்பிக்கள் தொடர்பு
மம்தாவுக்கு அடுத்த சிக்கல்: அதிருப்தி எம்எல்ஏக்களுடன் 23 எம்பிக்கள் தொடர்பு
ADDED : ஜூன் 05, 2026 03:45 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுடன் அக்கட்சியின் 23 எம்பிக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த பிறகு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. பல தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜ உள்ளிட்ட மற்ற கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். மம்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 80 எம்எல்ஏக்களில் 60 பேர், நீக்கப்பட்ட தலைவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், நீக்கப்பட்ட ரிட்பிரடா பானர்ஜி அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், அக்கட்சித் தலைவர் மம்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக எம்பிக்களும் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது.அக்கட்சிக்கு லோக்சபாவில் 21 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 8 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் 23 பேர் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களும் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ளதால், அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
