ADDED : செப் 01, 2026 07:42 PM
கொல்கட்டா, செப். 2–
மேற்கு வங்க முன்னாள் முதல்வரான மம்தா பானர்ஜியின் தாய் வழி சகோதரர் மகள் பிரிஷ்டி முகர்ஜி, 28, அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் தாய் வழி சகோதரர் நிஹார் முகர்ஜி. இவரது மகள் பிரிஷ்டி முகர்ஜி. திருமணமாகி விவாகரத்துக்கு விண்ணபித்திருந்த இவர் பிர்ஹாம் மாவட்டத்தின் குசும்பா கிராமத்தில் வசித்து வந்தார்.
நேற்று காலை வீட்டின் முதல் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடக்க பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தை முறைகேடாக பெற்றதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரிஷ்டி முகர்ஜி நேற்று தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
