114 வயது மாரத்தான் வீரர் மீது கார் மோதி கொன்றவர் கைது
114 வயது மாரத்தான் வீரர் மீது கார் மோதி கொன்றவர் கைது
ADDED : ஜூலை 17, 2025 01:13 AM

சண்டிகர் : உலகின் மூத்த மாரத்தான் வீரரான பவுஜா சிங், கார் விபத்தில் பலியாக காரணமான கனடாவைச் சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டம், பியாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுஜா சிங், 114; தன், 89வது வயதில் மாரத்தான் ஓட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டு போட்டிகளில் பங்கேற்க துவங்கினார். வட அமெரிக்க நாடான கனடாவில் தொடர்ந்து 5 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடி நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
உலகின் மூத்த மாரத்தான் வீரரான பவுஜா சிங் வயதான காலத்திலும் இளைஞர்களுக்கு உத்வேகம் தந்தார்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி ஜலந்தர் - பதான்கோட் நெடுஞ்சாலையில் நடைபயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டு பவுஜா சிங் உயிரிழந்தார்.
பவுஜா மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த அம்ரித்பால் சிங் தில்லான், 26, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்; அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.