ADDED : ஏப் 19, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா:அளவுக்கு அதிகமான போதையில், மனைவி கைவிரலைக் கடித்து துண்டித்தவர் கைது செய்யப்பட்டார்.
நொய்டா 12வது செக்டாரில் வசிப்பவர் அனூப் மன்சந்தா. இவரது மனைவி சசி மன் சந்தா. கடந்த 16ம் தேதி இரவு 10:00 மணிக்கு அளவுக்கு அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தார். கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மனைவியை சரமாரியாக தாக்கினார். மேலும், இடது கையில் கட்டை விரலைக் கடித்து துப்பினார்.
சசியின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து மீட்டனர். அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து, சசி கொடுத்த புகார்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அனூப் மன்சந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

