ADDED : டிச 19, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இணையதளத்தின் வாயிலாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், டில்லியைச் சேர்ந்த ஏ.கே.சீனிவாசன், 56, என்பவர் 23 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். நாளடைவில் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து போலீசில் அவர் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த அயன் தாஸ், 21, என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐந்து ஸ்மார்ட்போன்கள், ஒரு மடிக்கணினி, ஐந்து காசோலை புத்தகங்கள், ஒரு பாஸ்புக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.