உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 21, 2025 08:43 PM

அ நிறம் | அளவு
பாலக்காடு; பாலக்காடு அருகே, போதை மாத்திரையுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, மண்ணார்க்காடு டி.எஸ்.பி., சுந்தரன் மேற்பார்வையில், செர்ப்புளச்சேரி எஸ்.ஐ., விவேக் தலைமையிலான போலீசார், நெல்லாய பகுதியை சேர்ந்த பசலு, 40, என்பவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது, 76.83 கிராம் எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரையை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பசலுவை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
