ADDED : செப் 08, 2025 01:48 AM

கான்பூர்:மது குடிக்க 40 ரூபாய் பணம் தராததால், 80 வயது தாயை அடித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், காசிகவான் கிராமத்தில் வசித்தவர் ராஜேஸ்வரி,80. இவரது மகன் ராஜாராஜ்,35. மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்.
சம்பவத்தன்று, மது குடிக்க, 40 ரூபாய் கேட்டு தாயிடம் ராஜாராம் வாக்குவாதம் செய்தார். மகனிடம் இருந்து தப்பித்த ராஜேஸ்வரி அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். செங்கற்களால் கதவை உடைத்து புகுந்த ராஜாராம், தாயை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கினார்.
ராஜேஸ்வரி உதவி கேட்டு அலறிய போது, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது வழக்கமான சண்டை என நினைத்து விட்டனர்.
மயங்கி விழுந்த ராஜேஸ்வரி அதே இடத்தில் உயிரிழந்தார். ஆனால், ராஜாராம் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜாராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.