தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காலாவதியான மாத்திரைகளை `ஸ்டிக்கர்' ஒட்டி விற்றவர் கைது

காலாவதியான மாத்திரைகளை `ஸ்டிக்கர்' ஒட்டி விற்றவர் கைது

காலாவதியான மாத்திரைகளை `ஸ்டிக்கர்' ஒட்டி விற்றவர் கைது


UPDATED : நவ 22, 2026 05:21 PM

ADDED : நவ 22, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 05:21 PM ADDED : நவ 22, 2026 05:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மருந்து, மாத்திரைகள் வழங்குவதாக கூறி, டில்லியை சேர்ந்தவரிடம் மோசடி செய்த வழக்கில், சிறையில் இருந்தவரை நீதிமன்ற அனுமதியுடன், டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு பிடதி அருகே தொட்டேரி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் காலாவதியான மருந்து, மாத்திரைகளுக்கு, பிரபல மருந்து நிறுவன பெயரிலான ஸ்டிக்கரை ஒட்டி விற்ற வழக்கில், பிரஷாந்த் ரஞ்சன் பாபு என்பவர் உள்ளிட்டோரை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தது.

இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த மருந்து விற்பனை நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் மருந்து, மாத்திரைகள் வழங்குவதாக கூறி பிரஷாந்த் இரண்டு கோடி ரூபாய் வாங்கி இருந்தார். ஆனால் மருந்து, மாத்திரைகள் வழங்காமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமலும் மோசடி செய்துள்ளார்.

காலாவதியான மருந்து, மாத்திரைகளை விற்றதாக பிரஷாந்த் கைது செய்யப்பட்டது பற்றி அறிந்த அந்த மருந்து விற்பனை நிறுவன உரிமையாளர், டில்லி போலீசில் கடந்த மாதம் புகார் செய்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறையில் உள்ள பிரஷாந்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, பெங்களூரு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, அவரை காவலில் எடுக்க டில்லி போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதற்கான தீர்ப்பு நகலுடன் நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹாரா சென்ற போலீசார், பிரஷாந்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us