தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மனைவியை கத்தியால் குத்தியவர் பிடிபட்டார்

 மனைவியை கத்தியால் குத்தியவர் பிடிபட்டார்

 மனைவியை கத்தியால் குத்தியவர் பிடிபட்டார்


ADDED : ஏப் 26, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 06:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பெண் வழக்கறிஞரை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

டில்லி சோனியா விஹாரில் வசிப்பவர் மனோஜ் குமார்,40. இவரது மனைவி வழக்கறிஞர். கடந்த, 22ம் தேதி மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். காயம் அடைந்த வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மனோஜ் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், வடகிழக்கு டில்லி கஜூரி காஸ் பகுதியில், மனோஜ் ஏப்ரல் 26 அன்று கைது செய்யப்பட்டார்.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்தியதாக மனோஜ் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது ஏற்கனவே ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us