காங்., நிர்வாகி காரில் வெடிபொருள் பதுக்கியவர் கைது
காங்., நிர்வாகி காரில் வெடிபொருள் பதுக்கியவர் கைது
ADDED : செப் 08, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயநாடு: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள புல்பள்ளி மரக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் தங்கச்சன், 54; காங்கிரஸ் வார்டு தலைவராக உள்ளார்.
இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, தடை செய்யப்பட்ட 20 பாக்கெட் மது, மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் 15 வெடிமருந்து தோட்டாக்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்
பட்டன. இதையடுத்து, தங்கச்சனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, தங்கச்சன் வீட்டிலிருந்த 'சிசிடிவி' கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட மது, வெடிபொருட்களை பதுக்கி வைத்தது, பக்கத்து வீட்டுக்காரரான பிரசாத் என்பது தெரியவந்தது.
தங்கச்சனை போலீசில் சிக்கவைக்க அவர் இவ்வாறு செய்துள்ளார்.இதையடுத்து, பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.