தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ துப்பாக்கி காட்டி மிரட்டியவர் சிக்கினார்

 துப்பாக்கி காட்டி மிரட்டியவர் சிக்கினார்

 துப்பாக்கி காட்டி மிரட்டியவர் சிக்கினார்


ADDED : மார் 13, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 07:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:சட்ட விரோதமாக பெற்ற துப்பாக்கியை காட்டி, பலரையும் மிரட்டி வந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

வடக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள புராரி என்ற இடத்தை சேர்ந்தவர் ரவுடி தீபக் என்ற ஜும்ரி, 26. இவர் மீது வடக்கு டில்லியில் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், சமூகவலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என விரும்பிய அவர், நிழலுக தாதாக்களிடம் இருந்து சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கி ஒன்றை பெற்று, அதனுடன் இருப்பது போன்ற படத்தை, சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

அதை அறிந்த போலீசார், கடந்த 4ம் தேதி அதிகாலையில், புராரியில் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவருக்கு துப்பாக்கியை கொடுத்து அனுப்பிய ஹிமான்சு என்பவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us