உள்ளடக்கத்திற்கு செல்ல

ஆட்சேபனைக்குரிய பொருளை கோவில் வாசலில் வீசியவர் கைது
ஆட்சேபனைக்குரிய பொருளை கோவில் வாசலில் வீசியவர் கைது
ADDED : ஏப் 19, 2026 06:59 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: கோவில் வாசலில் ஆட்சேபனைக்குரிய பொருளை வீசியவர் கைது செய்யப்பட்டார்.
வடகிழக்கு டில்லி தயால்பூரில் அமைந்துள்ள ஒரு கோவில் வாசலில், ஆட்சேபனைக்குரிய பொருள் கிடப்பதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்றனர். கோவில் வாசலில் கிடந்த ஆட்சேபனைக்குரிய பொருளை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆட்சேபனைக்குரிய பொருளை கோவில் வாசலில் வீசியவரை கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்டவர் யார் என்ற விபரத்தை போலீசார் வெளியிடவில்லை. விசாரணை நடக்கிறது.
