பாதி விலைக்கு ஸ்கூட்டர், மடிக்கணினி தருவதாக மோசடி; பல கோடி ரூபாய் ஏப்பம் விட்டவர் கைது
பாதி விலைக்கு ஸ்கூட்டர், மடிக்கணினி தருவதாக மோசடி; பல கோடி ரூபாய் ஏப்பம் விட்டவர் கைது
ADDED : பிப் 05, 2025 02:36 PM

கொச்சி: கேரளா முழுவதும் ஸ்கூட்டர்கள், தையல் இயந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மடிக்கணினிகளை பாதி விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 26 வயதான ஆனந்த் கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
சமூக பொருளாதார மேம்பாட்டு சங்கம் என்ற பெயரில், ஆனந்த் கிருஷ்ணன்(26) என்பவர் பல கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மூவாட்டுப் புழாவில் பலரிடம், பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள், தையல் இயந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மடிக்கணினிகள் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
புகார் படி, ஆனந்த் கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். இவர்,கடந்த 2022ம் ஆண்டு முதல் பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது மூவாட்டுபுழா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் இதுவரை ரூ.20 கோடிக்கும் மேல் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. கேரளா முழுவதும் இவர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.